ரிஷாப் மீண்டு வருவார் * பீட்டர்சன் ஆதரவு | டிசம்பர் 09, 2019

தினமலர்  தினமலர்
ரிஷாப் மீண்டு வருவார் * பீட்டர்சன் ஆதரவு | டிசம்பர் 09, 2019

 புதுடில்லி: ‘ரிஷாப் பன்ட் தனது முழுத்திறமையை உணர்ந்து கொள்ள இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படும். சிறந்த வீரராக வரும் வரை போதிய அவகாசம் தர வேண்டும்,’’ என பீட்டர்சன் தெரிவித்தார்.

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் 22. ‘சீனியர்’ தோனிக்கு மாற்றாக பேசப்படும் இவர், பேட்டிங், விக்கெட் கீப்பிங் பணியில் தொடர்ந்து சொதப்புகிறார். இதுகுறித்து இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் பீட்டர்சன் கூறியது:

ரிஷாப் பன்ட் இளம் வீரர், திறமை மிக்கவர். போட்டிகளில் உற்சாகமாக பங்கேற்கிறார். ஐ.பி.எல்., மட்டுமன்றி இந்திய அணிக்காகவும் விளையாடுகிறார். இவரைச் சுற்றி பல்வேறு விமர்சனங்கள் உலா வருகின்றன. ஐ.பி.எல்., தொடரில் இவரை பலமுறை பார்த்துள்ளேன். செய்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வார். பிறகு பலரும் இப்படித் தான் பேசுவர். ஏனெனில் ரிஷாப் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

ரிஷாப் வயது 24 அல்லது 25 ஆக இருப்பதாக நினைக்கிறேன். ஏனெனில் இந்த வயது தான் போட்டியில் சிறப்பான முறையில் மீண்டு வர வேண்டிய தருணம். 27–30 களில் உங்களது முழுத்திறமையும் வெளிப்படுத்தி விளையாட வேண்டும்.

இருப்பினும் இப்போதுள்ள 22 வயதில் இந்தளவுக்கு விளையாடுகிறார். இன்னும் சிறிது கால அவகாசம் கொடுக்கும் பட்சத்தில் இந்திய அணியின் ‘சூப்பர் ஸ்டாராக’ வலம் வரலாம். இதை அவரால் கட்டாயம் செய்ய முடியும்.

இப்போதைய நிலையில் உலக கோப்பை ‘டுவென்டி–20’க்கு இன்னும் 10 மாதங்கள் தான் உள்ளன. ரிஷாப்பிற்குப் பதில் மற்றொரு விக்கெட் கீப்பரும் இடம் பெறலாம். ஆனால் ரிஷாப் மீது அதிகப்படியான நெருக்கடி தேவையற்றது.

இவ்வாறு பீட்டர்சன் கூறினார்.

மூலக்கதை