ஐதராபாதில், 'வலிமை' படப்பிடிப்பு

தினமலர்  தினமலர்
ஐதராபாதில், வலிமை படப்பிடிப்பு

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிக்கும், வலிமை படத்தில், அஜித் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. படப்பிடிப்பு எப்போது துவங்கும் என, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் விழா ஒன்றில் பங்கேற்ற போனி கபூர், ''வலிமை படப்பிடிப்பு, ஐதராபாதில் உள்ள, 'ராமோஜி ராவ் பிலிம் சிட்டி'யில், 13ம் தேதி துவங்கும். இதற்காக பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது. படம், 2020 தீபாவளிக்கு வெளியாகும்,'' என்றார்.

மூலக்கதை