உலகளவில் ஆயுத விற்பனை 5% அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
உலகளவில் ஆயுத விற்பனை 5% அதிகரிப்பு

வாஷிங்டன்: சுவீடனை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆயுத விற்பனை குறித்த ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:   கடந்த ஆண்டு உலக அளவில் 5 சதவீதம் அளவுக்கு ஆயுத விற்பனை அதிகரித்துள்ளது.  இதன் மூலம் 29 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இதில் 59%  அமெரிக்காவில் தயாரானவை. இதன் மூலம் 17 லட்சம் கோடி ரூபாயை அமெரிக்கா பெற்றுள்ளது. இது கடந்த 2017ம் ஆண்டை விட 7.2% அதிகம். ஆயுத விற்பனையில் அடுத்த இடம் ரஷ்யாவுக்கு கிடைத்துள்ளது. இது 8.6% ஆயுதங்களை விற்றுள்ளது. இதற்கு அடுத்த இடத்தை தலா 8.4 சதவீத விற்பனையுடன் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் பிடித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை