தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஜார்க்கண்ட் வந்த சிஆர்பிஎப் வீரர்களை விலங்குகளைபோல் நடத்திய கொடூரம்: தீயணைப்பு வண்டி நீரை குடிக்க கொடுத்ததாக புகார்

தினகரன்  தினகரன்
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஜார்க்கண்ட் வந்த சிஆர்பிஎப் வீரர்களை விலங்குகளைபோல் நடத்திய கொடூரம்: தீயணைப்பு வண்டி நீரை குடிக்க கொடுத்ததாக புகார்

புதுடெல்லி: சிஆர்பிஎப் வீரர்களை விலங்குகளைபோல் நடத்தியதாக ஜார்க்கண்ட் அரசை சிஆர்பிஎப் தலைமை குற்றம்சாட்டியுள்ளது.  ஜார்கண்டில் 5 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 222வது பட்டாலியனை சேர்ந்த உதவி கமாண்டர் அந்தஸ்திலான அதிகாரி ``தங்களை விலங்குகளைபோல் நடத்தினர்\'\' என குற்றம்சாட்டி மாநில நிர்வாகம் மற்றும் டெல்லியில் உள்ள சிஆர்பிஎப் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த புகார் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:  கடந்த 7ம் தேதி  தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சென்ற எங்களது குழுவை சேர்ந்த 100 பேருக்கு உள்ளூர் அதிகாரிகள் உதவி செய்யவில்லை. நாங்கள் ராஞ்சி ெசல்ல 17 கிமீ தொலைவை நடந்தே சென்றோம். குடிப்பதற்கும் சமையல் செய்வதற்கும் தீயணைப்பு வண்டி நீரைதான் எங்களுக்கு கொடுத்தனர்.  எங்கள் படை வீரர்களை மாநில அரசு விலங்குகளைபோல் நடத்தியது. கண்ணியமாகவோ கவுரவமாகவோ நடத்தவில்லை.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சிஆர்பிஎப்பின் இந்த குற்றச்சாட்டை மாநில கூடுதல் டிஜிபி மீனா மறுத்துள்ளார். ``அதிகபடியானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் ஆரம்பத்தில் சில பிரச்னைகள் உருவானது. பின்னர் சரி செய்யப்பட்டு விட்டது\'\' என  தெரிவித்தார்.

மூலக்கதை