மக்களுக்கு வெங்காய பையை பரிசாக வழங்கினார் புதுவை முதல்வர்

தினகரன்  தினகரன்
மக்களுக்கு வெங்காய பையை பரிசாக வழங்கினார் புதுவை முதல்வர்

புதுச்சேரி:   சோனியா காந்தியின் 73வது பிறந்தநாள் விழாவில் 100 மகளிருக்கு தலா அரை கிலோ வெங்காயத்தை முதல்வர் நாராயணசாமி  வழங்கினார்.  புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.  மாநில தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு கேக் வெட்டி கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து, மகிளா காங்கிரஸை சேர்ந்த 100 மகளிருக்கு தலா அரை கிலோ வீதம் 50 கிலோ வெங்காயத்தை பைகளில் போட்டு வழங்கினார். பின்னர் முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறுகையில், வெங்காயத்தின் விலை நம் நாட்டில் விண்ணுக்கு சென்றிருக்கிறது. மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் ₹ 130க்கு விற்கப்படுகிறது. இதை பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. அதனை மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் காங்கிரஸ் சார்பில் மகளிருக்கு பரிசாக வெங்காயம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மூலக்கதை