இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை மறுப்பா? உள்துறை இணையமைச்சர் விளக்கம்

தினகரன்  தினகரன்
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை மறுப்பா? உள்துறை இணையமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: சட்டவிரோதமாக குடியேறிவர்கள், இந்திய குடியுரிமை பெற தகுதியில்லை என மத்திய உள்துறை அமைச்சர் நித்யானந் ராய் கூறியுள்ளார்.  இந்தியாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு நிரந்த குடியுரிமை வழங்கும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா என மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: இந்திய குடியுரிமை சட்டம்(1955) மற்றும் இந்திய குடியுரிமை விதிமுறைகள்(2009)-ல் உள்ள விதிமுறைகள்படிதான் இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறது. எந்த வெளிநாட்டினரும் குடியுரிமை சட்டத்தின் 5வது பிரிவின் கீழ் பதிவு செய்வதன் மூலமாகவும், 6வது பிரிவின் கீழும் குடியுரிமை பெற முடியும். ஆனால் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எந்த வகையிலும் குடியுரிமை பெற தகுதியில்லை.  இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை