சோனியாவுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து: திமுக எம்பிக்களும் நேரில் வாழ்த்து

தினகரன்  தினகரன்
சோனியாவுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து: திமுக எம்பிக்களும் நேரில் வாழ்த்து

சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் மற்றும் முகநூல் பக்கங்களில் நேற்று  வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது: இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் சோனியா காந்திக்கு, அவருடைய பிறந்தநாளான இன்று, என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் மதச்சார்பின்மையையும்,  கூட்டாட்சித் தத்துவத்தையும் காப்பதில், அவரது தலைமையிலான காங்கிரஸ் கட்சி முக்கிய மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்பாற்றியுள்ளது. அவரின் பொதுவாழ்வுப் பயணம், மேலும் பல்லாண்டுகள் தொடர வாழ்த்துகிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளான நேற்று, டெல்லியில்  சோனியா காந்தியை டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, ராசா, ஆர்.எஸ்.பாரதி, தமிழச்சி தங்கப்பாண்டியன், கலாநிதி வீராசாமி, பச்சமுத்து உள்ளிட்ட திமுக மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரில் சந்தித்து பிறந்தநாள்  வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மூலக்கதை