பய்யா... வெங்காயம் கித்னா ருப்பியா? : மார்கெட்டுக்கு வந்து விசாரித்த மம்தா

தினகரன்  தினகரன்
பய்யா... வெங்காயம் கித்னா ருப்பியா? : மார்கெட்டுக்கு வந்து விசாரித்த மம்தா

கொல்கத்தா:  நாட்டில் வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா மார்க்கெட்டுக்கு திடீரென சென்று பார்வையிட்டார். நாட்டில் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் கூட்டுறவு கடைகள் தவிர, 935 நியாய விலைக்கடைகளில் 59க்கு கிலோ வெங்காயத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொல்கத்தாவில் நேற்று கிலோ வெங்காயம் 164க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மெதினிப்பூர் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னதாக முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று திடீரென தெற்கு கொல்கத்தாவில் உள்ள பவானிபூர் பகுதி மார்க்கெட்டுக்கு சென்றார். அங்குள்ள வியாபாரிகளை சந்தித்தார். உருளைகிழங்கு என்ன விலைக்கு விற்கிறீர்கள், வெங்காயம் என்ன விலைக்கு விற்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார். இவற்றை எங்கிருந்து கொள்முதல் செய்கிறீர்கள். நியாய விலைக்கடைகளில் இருந்து வெங்காயத்தை கிலோ 59க்கு வாங்குகிறீர்களா என்றும் அவர் வினவினார்.

மூலக்கதை