ஒரே மாதத்தில் 2.52 உயர்வு பெட்ரோல் விலை மீண்டும் கிடு கிடு

தினகரன்  தினகரன்
ஒரே மாதத்தில் 2.52 உயர்வு பெட்ரோல் விலை மீண்டும் கிடு கிடு

புதுடெல்லி: பெட்ரோல் விலை சென்னையில் 78ஐ நெருங்கியது நேற்று ஒரு லிட்டர் 77.97க்கு விற்கப்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயம் செய்கின்றன.  கடந்த ஆண்டு அக்டோபரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 87ஐ தாண்டியது. நவம்பருக்கு பிறகு படிப்படியாக குறைந்தது. இந்நிலையில், மீண்டும் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 77.97க்கு விற்கப்பட்டது. டெல்லியில் 75ஐ எட்டியுள்ளது. மதுரையில் 78.57, சேலத்தில் 78.39, பெங்களூருவில் 77.57, மும்பையில் 80.65க்கு விற்பனையானது.இதுபோல், டீசல் விலையும் 70ஐ நெருங்கி விட்டது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர்  டீசல் 69.81க்கு விற்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் பல இடங்களில் 70ஐ தாண்டி விட்டது. சேலத்தில் ஒரு லிட்டர் டீசல் 70.23, மதுரையில் 70.41க்கு விற்கப்பட்டது. டெல்லியில் ₹66.04, பெங்களூருவில் 68.29. மும்பையில் 69.27க்கு விற்பனையானது. கடந்த நவம்பர் மாதம் 9ம் தேதியில் இருந்தே பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை விலையை பொறுத்தவரை கடந்த ஒரு மாதத்தில் பெட்ரோல் 2.52 உயர்ந்துள்ளது. செப்டம்பரில் சவூதி அரேபியாவில் நடந்த தாக்குதலால் 2 வாரங்களிலேயே பெட்ரோல் 2.50 உயர்ந்தது. அதன்பிறகு விலை சற்று குறைந்தது. ஆனால், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்ததால் மீண்டும் உயரத்தொடங்கி விட்டது.

மூலக்கதை