அறிவழகன் - அருண் விஜய் படப்பிடிப்பு துவங்கியது

தினமலர்  தினமலர்
அறிவழகன்  அருண் விஜய் படப்பிடிப்பு துவங்கியது

அறிவழகன் இயக்கிய குற்றம் 23 படத்தில் நடித்த அருண் விஜய் மீண்டும் அவர் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது அருண் விஜய்யின் 31வது படமாகும். ஸ்பை, ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகம் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, டில்லி உள்பட பல முக்கிய நகரங்களில் நடைபெற உள்ள நிலையில் இதன் படப்பிடிப்பு இன்று(டிச.,9) பூஜையுடன் துவங்கியது.

இப்படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார். சாம்.சிஎஸ் இசையமைக்க, பி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ஆல்.இன்.ஆல் பிக்சர்ஸ், விஜய் ராக வேந்திரா பிலிம்ஸ் படத்தை தயாரிக்க இருப்பதாக தற்போது அந்நிறுவனம் ஒரு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. தற்போது நடித்து வரும் மாபியா, அக்னிச்சிறகுகள் படங்களை அடுத்து இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் அருண் விஜய்.

மூலக்கதை