'ராங்கி' - டீசர் ஆக்ஷன் ஹீரோயினாக த்ரிஷா

தினமலர்  தினமலர்
ராங்கி  டீசர் ஆக்ஷன் ஹீரோயினாக த்ரிஷா

தமிழ் சினிமாவில் நயன்தாராவுக்கு முன்பாகவே அறிமுகமானவராக இருந்தாலும் தனி ஹீரோயினாக நயன்தாரா பெற்ற வெற்றியை த்ரிஷா இன்னும் பெறவில்லை. அவர் தனி ஹீரோயினாக நடித்து வெளிவந்த 'நாயகி, மோகினி' ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன. அவர் நடித்து முடித்த 'கர்ஜனை' படம் எப்போது வெளிவரும் என்று தெரியவில்லை.

இதனிடையே, ஏ.ஆர்.முருகதாஸ் எழுத்தில், 'எங்கேயும் எப்போதும்' சரவணன் இயக்கத்தில் த்ரிஷா தனி கதாநாயகியாக நடித்துள்ள 'ராங்கி' படத்தின் டீசரை எந்த பரபரப்பும் இல்லாமல் நேற்று காலை வெளியிட்டனர்.

லைகா தயாரித்துள்ள 'தர்பார்' படத்தின் இசை வெளியீடு நேற்று முன்தினம் நடந்ததால் அதனுடன் 'ராங்கி' டீசரையும் வெளியிட்டால் ஒரு இலவசம் விளம்பரம் கிடைக்கும் என்று வெளியிட்டிருக்கலாம்.

இருப்பினும் 'ராங்கி' டீசர் பார்ப்பதற்கு நன்றாகவே உள்ளது. படத்தில் த்ரிஷா ஆக்ஷன் கதாநாயகியாக நடித்திருப்பார் போலிருக்கிறது. துப்பாக்கி எல்லாம் வைத்துக் கொண்டு சண்டை போடுகிறார். கடத்தப்பட்ட இளம் சிறுமி ஒருவரைக் காப்பாற்றுகிறார். இதனால், அவர் போலீஸ் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

இந்தப் படம் மூலமாவது தனி கதாநாயகியாக தன் முதல் வெற்றியை த்ரிஷா பதிக்கட்டும்.

மூலக்கதை