நாயகி இல்லாமல் ஆரம்பமாகும் 'வலிமை'

தினமலர்  தினமலர்
நாயகி இல்லாமல் ஆரம்பமாகும் வலிமை

'நேர்கொண்ட பார்வை' படத்திற்குப் பிறகு தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் வினோத், அஜித் ஆகியோர் மீண்டும் இணையும் படம் 'வலிமை'. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் டிசம்பர் 13ம் தேதி ஆரம்பமாக உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். ஆனால், படத்தின் நாயகி யார் என்பது குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே தமிழில் முன்னணியில் இருக்கும் நடிகைகளில் யாராவது ஒருவர் நடிக்கப் போகிறாரா அல்லது ஹிந்தியிலிருந்து யாராவது ஒருவர் அறிமுகமாகப் போகிறாரா என்பது இன்னும் கேள்வியாகவே உள்ளது.

இருப்பினும் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க உள்ளவர் முக்கியமான ஒருவராக இருக்கலாம் என்றே சொல்கிறார்கள். இந்நேரம் அவர் யார் என்பதை முடிவு செய்திருப்பார்கள், சரியான நேரத்தில் அது பற்றிய அறிவிப்பு வரலாம் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை