அதிக விலைக்கு விற்கப்பட்ட பிரித்விராஜின் டிரைவிங் லைசென்ஸ்

தினமலர்  தினமலர்
அதிக விலைக்கு விற்கப்பட்ட பிரித்விராஜின் டிரைவிங் லைசென்ஸ்

மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை ரிலீஸாக வெளியாக இருக்கும் படம் டிரைவிங் லைசென்ஸ். இப்படத்தில் பிரித்விராஜ், ஒரு சூப்பர் ஸ்டார் நடிகராக நடித்துள்ளார். ஹீரோவுக்கும், அவரது சராசரி ரசிகனுக்குமான பந்தம் பற்றிய கதைதான் இந்த டிரைவிங் லைசென்ஸ். இந்த படத்தை சண்டக்கோழி நடிகர் லாலின் மகன் ஜீன் பல் லால் இயக்கி உள்ளார்.

இந்தப்படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்தப்படத்தின் ஓவர்சீஸ் உரிமையை பார்ஸ் என்கிற நிறுவனம் ரூ.2.55 கோடி விலை கொடுத்து வாங்கியுள்ளது. இதுவரை வெளியான பிரித்விராஜ் படங்களிலேயே ஓவர்சீஸ் உரிமை அதிக விலைக்கு விற்கப்பட்டது இந்த டிரைவிங் லைசன்ஸ் படத்திற்கு தானாம். இந்த படத்தில் கதாநாயகியாக மியா ஜார்ஜ் மற்றும் தீப்தி சதி ஆகியோர் நடித்துள்ளனர்.

மூலக்கதை