இருமொழிகளில் தயாராகும் விஜய்சேதுபதி - மஞ்சு வாரியர் படம்

தினமலர்  தினமலர்
இருமொழிகளில் தயாராகும் விஜய்சேதுபதி  மஞ்சு வாரியர் படம்

இந்த ஆண்டு திரையுலகில் நிகழ்ந்த இரண்டு அதிசய நிகழ்வுகளில் ஒன்று விஜய்சேதுபதி முதல்முறையாக மார்க்கோனி மத்தாய் என்கிற படம் மூலமாக மலையாளத்தில் அடியெடுத்து வைத்தது. இன்னொன்று மலையாள நடிகை மஞ்சுவாரியர் அசுரன் படம் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தது.. இவர்கள் இருவரும் இணைந்து தமிழ், மலையாளம் மொழிகளிலும் உருவாகும் படத்தில் நடிக்கிறார்கள்..

இந்த படத்தில் இன்னொரு கதாநாயகனாக விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிக்க இருக்கிறார் பிஜூமேனன். ஆர்.ஜே.ஷான் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே மஞ்சு வாரியர் நடித்த C/o சாய்ராபானு என்கிற படத்தின் கதாசிரியர்களில் ஒருவராக பணியாற்றியவர். இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் மஞ்சு வாரியர் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

மூலக்கதை