உதவிடுவதாக அமைச்சர் உறுதி: ராகவா லாரன்ஸ்

தினமலர்  தினமலர்
உதவிடுவதாக அமைச்சர் உறுதி: ராகவா லாரன்ஸ்

தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவிடுவதற்காக நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரை சந்தித்துப் பேசியுள்ளார்.
நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தன்னிடம் உதவி கேட்டு வரும் மாற்றுத் திறனாளிக, ஏழை - எளியவருக்கு தன்னால் இயன்ற அளவுக்கு உதவிகளை செய்து வருகிறார். இது தொடர்பாக டுவிட்டரில் இரு நாட்களுக்கு முன் பதிவு ஒன்றை போட்டிருந்தார்.

அதில், அவர் கூறியிருந்ததாவது: வாழ்க்கையின் அடித்தட்டில் இருந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருப்போர், என்னை நாடி வந்து உதவி கேட்கும்போது, அதை முடிந்த மட்டும் செய்து கொடுக்கிறேன். சில விஷயங்கள், நம் சக்திக்குட்பட்டு செய்ய முடியாதவையாக இருக்கின்றன. அந்த சமயத்தில், நான் அரசின் உதவியையும் நாடுகிறேன். இப்படித்தான், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோரை சந்தித்துப் பேசி, பலருக்கும் பல்வேறு விதமான உதவிகளை செய்து கொடுத்திருக்கிறேன். அதேபோல, தற்போதும் உதவிகள் தேவைப்படுவதால், விரைவில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து உதவிக் கோரவிருக்கிறேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில், அவர், இன்று(டிச.,9) தமிழக சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்துப் பேசி, இல்லாதவர்களுக்கு உதவி கோரி மனு அளித்திருக்கிறார். அதை ஏற்றுக் கொண்ட அமைச்சர் விஜய பாஸ்கர், ராகவா லாரன்ஸின் வேண்டுகோளை ஏற்று, சுகாதாரத் துறை மூலம் செய்து கொடுக்க வேண்டிய உதவிகளை, ஏழை-எளியோருக்கு செய்து கொடுக்கப்படும் என உறுதி அளித்திருக்கிறார். இதையும், தன் டுவிட்டர் பக்கம் மூலம், ராகவா லாரன்ஸ் தெரிவித்திருக்கிறார்.

மூலக்கதை