மீண்டும் ஜெமினியாக துல்கர்

தினமலர்  தினமலர்
மீண்டும் ஜெமினியாக துல்கர்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அப்படியே பிரதிபலிக்கும்படி எடுக்கப்பட்டு வரும் படம் தலைவி. இதை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்குகிறார். இதில், ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர்., வேடத்தில் அரவிந்தசாமியும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில் சசிகலா வேடத்தில், நடிகை ப்ரியா மணி நடிக்கவிருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானதை அடுத்து, இந்தப் படத்தில், ஜெமினி கணேசன் கேரக்டரும் வலுவாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால், அந்தக் கேரக்டரில் நடிக்க நடிகர் துல்கர் சல்மான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே மகாநடி படத்தில், ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தி, துல்கர் சல்மான் சிறப்பாக நடித்ததை அடுத்து, அவருக்கு, தலைவி படத்திலும் வாய்ப்பு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

மூலக்கதை