இடைத் தேர்தலில் வென்ற எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி: கர்நாடக முதல்வர் தகவல்

தினகரன்  தினகரன்
இடைத் தேர்தலில் வென்ற எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி: கர்நாடக முதல்வர் தகவல்

பெங்களூரு: இடைத்தேர்தலில் வென்ற புதிய எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து டெல்லி சென்று பாஜக தலைமையுடன் விவாதித்த முடிவெடுப்பேன் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறினார். கர்நாடகாவில் காலியாகவுள்ள சிவாஜிநகர்,கே.ஆர்.புரம் உள்ளிட்ட‌ 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜத ஆகிய மூன்று கட்சிக்களுக்கிடையே கடும் போட்டி நிலவியது. 15 தொகுதிகளிலும் பதிவான 66.49 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா தலைமையிலான பாஜகவுக்கு போதுமான ஆதரவு இல்லாததால் இந்த தேர்தலில் பாஜக‌ 6 முதல் 8 இடங்களில் வெற்றிப்பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் எடியூரப்பா ஆட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்க இருப்பதால் கர்நாடகாவில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டு வருகின்றன. பாஜக ஓரிடத்தில் வென்றுள்ளது. அந்த கட்சி மேலும் 11 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதாதளம் எந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை. ஒரு தொகுதியில் சுயேச்சை முன்னிலை வகித்து வருகிறார்.இதுகுறித்து எடியூரப்பாகூறுகையில், இடைத்தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு மாபெரும் ஆதரவை வழங்கியுள்ளார்கள். பாஜக இதுவரை வென்றிராத கே.ஆர்.பேடே தொகுதியிலும் வென்றுள்ளோம். காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிகள் பற்றி ஏதும் கூறவிரும்பவில்லை. பிரதமர் மோடி மற்றும் கட்சித் தலைவர் அமித்ஷாவுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இடைத்தேர்தலில் வென்ற புதிய எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து டெல்லி சென்று பாஜக தலைமையுடன் விவாதித்த முடிவெடுப்பேன் எனக் கூறினார்.

மூலக்கதை