தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: 293 எம்பிக்கள் ஆதரவு, 82 எம்பிக்கள் எதிர்ப்பு

தினகரன்  தினகரன்
தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: 293 எம்பிக்கள் ஆதரவு, 82 எம்பிக்கள் எதிர்ப்பு

டெல்லி: தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து விவாதிக்க 293 எம்பிக்கள் ஆதரவு மற்றும் 82 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்தார். இதற்கு காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது பேசிய அமித்ஷா, குடியுரிமை சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என தெரிவித்தார். இந்த மசோதாவை தாக்கல் செய்து விவாதிக்க 293 பேர் ஆதரவு தெரிவித்தனர். 82 பேர் எதிராக ஓட்டளித்தனர்.

மூலக்கதை