காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா 73வது பிறந்த நாள்: மோடி உட்பட தலைவர்கள் வாழ்த்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா 73வது பிறந்த நாள்: மோடி உட்பட தலைவர்கள் வாழ்த்து

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு இன்று (டிச.

9) 73வது பிறந்த நாளாகும். பிறந்த நாளை முன்னிட்டு சோனியா காந்திக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்துச்செய்தியில், ‘சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,  நீண்ட ஆயுள் நல்ல ஆரோக்கியத்துடன்  வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்களினால் துயரம் அடைந்த சோனியாகாந்தி, இன்று தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘நீண்ட காலமாக பணியாற்றிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் முன்மாதிரியான தன்மை, மூத்த காங்கிரஸ் தலைவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அவரது பலம், கண்ணியம், இரக்கம் மற்றும் கருணை ஆகியவை எங்களை ஒன்றிணைத்து எங்களை பலப்படுத்தியுள்ளன.

அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர்களான குமாரி செல்ஜா, மணீஷ் திவாரி, ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட், மிலிந்த் தியோரா, மஹிலா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ் ஆகியோர் தங்கள் கட்சித் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



.

மூலக்கதை