‘பைகா கலகம் நினைவிடம் எதிர்காலத்துக்கு வழிகாட்டும்’

தினகரன்  தினகரன்
‘பைகா கலகம் நினைவிடம் எதிர்காலத்துக்கு வழிகாட்டும்’

புவனேஸ்வர்: ஒடிசாவின் குர்தா மாவட்டத்தில் பைகா கலகத்தின் நினைவிடம் 10 ஏக்கர் நிலபரப்பில்  அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் விழா ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  தலைமையில் நேற்று நடந்தது. அப்போது அவர் பேசியதாவது: கடந்த 1817ல் பைகா கலகம் வெடித்தது. இதில் விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர். ஒடிசா மக்களுடைய வீரத்தின் அடையாளமாக விளங்கும் பைகா கலகம் வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டுதலாக அமையும்.  இவ்வாறு அவர் பேசினார்.இந்த  விழாவில் மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மூலக்கதை