பெண்களுக்கு எதிரான குற்றத்தால் வேதனை பிறந்தநாள் விழாவை தவிர்க்கிறார் சோனியா

தினகரன்  தினகரன்
பெண்களுக்கு எதிரான குற்றத்தால் வேதனை பிறந்தநாள் விழாவை தவிர்க்கிறார் சோனியா

புதுடெல்லி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு இன்று 73வது பிறந்த நாள். இந்த முறை அவர் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை தவிர்க்க முடிவு செய்துள்ளார்.இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘‘நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை அதிகமாகி இருக்கிறது. இது, சோனியா காந்திக்கு கவலை அளித்துள்ளது. உன்னாவில் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண் நேற்று முன்தினம் உயிரிழந்தார். ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டார். இதுபோன்ற சம்பவங்களால், சோனியா தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்க முடிவு செய்துள்ளார்,’’ என்றார்.

மூலக்கதை