நீதிமன்ற நடைமுறைகள் மூலம் ஏழைகளை நீதி சென்றடைவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

தினகரன்  தினகரன்
நீதிமன்ற நடைமுறைகள் மூலம் ஏழைகளை நீதி சென்றடைவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

ஜோத்பூர்: நீதிமன்ற நடைமுறைகள் மூலம் ஏழைகளை நீதி சென்றடைவதில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த கோர்ட் திறப்பு விழாவில் பங்கேற்று அவர் மேலும் பேசியதாவது: இன்று ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் புகார் மனுவுடன் செல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது மிக முக்கியமானதாகும். ஏனெனில் நாம் அனைவரும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அனைவருக்கும் நீதி வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ளோம். நீதிமன்ற நடவடிக்கைகள் என்பது பெரும் செலவினமானதாக ஏழைகளுக்கு உள்ளது. இது மாற்றப்பட வேண்டும். அதிக செலவினத்தால் ஏழைகள் ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவதில்லை. ஏழைகள் முகத்தை நாம் நினைத்தால் அவர்களுக்கு சரியான தீர்வை காண முடியும். இதற்கான ஒரு வழியாக தற்போது ஏழைகளுக்கு இலவச சட்ட மையம் உள்ளது. ஏழைகளுக்கும் நீதி கிடைக்க இன்னும் நாம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். நீதித்துறை நடைமுறைகள் சாமான்ய மக்களை எளிதாக சென்றடையவில்லை. காந்தியின் கோட்பாடுகளை மனதில் நிறுத்தி, ஏழைகளுக்கு உதவ அனைவரும் முன் வரவேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவுறுத்தினார். நாட்டு மக்கள் அனைவருக்குமான தரமான கல்வி, மருத்துவம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது. குறிப்பாக, கிராமப்புற மக்கள் மற்றும் நாட்டின் கடைக்கோடி பகுதிகளில் வாழ்பவர்களின் நலன்களில் நாம் மேலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மூலக்கதை