'மக்களுக்கு அடுத்த பேரிடி' ஜிஎஸ்டி மீண்டும் கடுமையாக உயர்கிறது: பல்வேறு பொருட்களின் விலை அதிகரிக்கும் 1 லட்சம் கோடி கூடுதலாக வசூலிக்க அதிரடி

தினகரன்  தினகரன்
மக்களுக்கு அடுத்த பேரிடி ஜிஎஸ்டி மீண்டும் கடுமையாக உயர்கிறது: பல்வேறு பொருட்களின் விலை அதிகரிக்கும் 1 லட்சம் கோடி கூடுதலாக வசூலிக்க அதிரடி

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி முறையில் பெரும் மாற்றம் வருகிறது. 5 சதவீத வரி செலுத்தி வந்த பொருட்களுக்கு எல்லாம் இனி 10 சதவீத வரியை கட்ட வேண்டும். 12 சதவீதம் என்ற வரி அடுக்கு இனி கிடையாது. இதில் சேர்க்கப்பட்டிருந்த பொருட்களுக்கு 18 சதவீத வரி செலுத்த வேண்டும். இது ெதாடர்பாக அடுத்த வாரத்தில் நடக்கும் கவுன்சில் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்பட உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை, மத்திய அரசுக்கு கூடுதல் சுமைகளை ஏற்றியுள்ளது. ஒரு பக்கம் ஜிஎஸ்டி வரி வசூல் மாதத்துக்கு மாதம் குறைந்து வருகிறது. சராசரியாக 2 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. மேலும், மாநிலங்களுக்கு தர வேண்டிய பங்கும் குறைகிறது. ஜிஎஸ்டி வரி வருவாயும் சரிந்ததால் விழி பிதுங்கி இருக்கும் மத்திய அரசு, வேறு வழியில்லாமல் வரி அடுக்குகளை மாற்றி, அதிகமாக மீண்டும் வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த வாரம் நடக்க உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், இதற்கான முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலாகி இரண்டரை ஆண்டுகள் ஆகி விட்டன. கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி வரி முறை அமல் செய்யப்பட்டது. அப்போது, வர்த்தகர்கள் மற்றும் மக்களிடம் இருந்து கிளம்பிய எதிர்ப்புகள் காரணமாக, 14.4 சதவீதம் வரி போடப்பட்ட பொருட்களுக்கான வரி 11.6 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதன் பின், ஐந்து அடுக்காக வரி முறை கொண்டு வரப்பட்டது. இதன்படி, உணவுப்பொருட்கள் உட்பட 160 அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை. 288 பொருட்களுக்கு 5 சதவீத வரி. 12 சதவீத வரி 243 பொருட்களுக்கு போடப்பட்டது. 631 பொருட்களுக்கு 18 சதவீத வரி அமலானது. ஆடம்பர பொருட்கள், சேவைகள் வரிசையில் 29 அம்சங்கள் சேர்க்கப்பட்டு 28 சதவீத வரி போடப்பட்டது இரண்டரை ஆண்டுகளில் அரசுக்கு பெரிய  அளவில் ஜிஎஸ்டி வரி வருவாய் கிடைக்கவில்லை. இதனால், சில மாற்றங்களை கொண்டு வந்து வரி முறையை சீராக்கி, மேலும் ஒரு லட்சம் ேகாடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்க திட்டமிட்டுள்ளது கவுன்சில். * 5 சதவீத வரி முறை இனி இருக்காது. இந்த வரி முறை 9 மற்றும் 10 சதவீத வரி முறையாக மாறுகிறது. * இதுபோல், 12 சதவீத வரி அடுக்கும் இனி இருக்காது. இதில் உள்ள 243 பொருட்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படலாம். * இதோடு 28% வரி அடுக்குதான் இருக்கும். * இப்போது, ஜிஎஸ்டி வரி வருவாய் பெரிதும் கையை கடிப்பதால் அரசு திணறி வருகிறது. மீண்டும் வரியை ஏற்றி விடுவது என்பதில் தீவிரமாக உள்ளது.  \'*பருப்புக்கும் அதிக வரி\'* 5% வரி விதிக்கப்பட்ட பிராண்ட் தானிய வகைகள், மாவுப்பொருட்கள், பன்னீர், எகானமி விமான கட்டணம், ரயில் முதல், 2ம் வகுப்பு ஏசி கட்டணம், பாமாயில், ஆலிவ் ஆயில், பிட்சா, பிரட், உலர் பழங்கள்,கேட்டரிங், ஓட்டல் உணவுப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படலாம். * 12 சதவீத வரி செலுத்தப்படும் மொபைல் போன், பிசினஸ் வகுப்பு விமான கட்டணம், லாட்டரி கட்டணம், ஓவியங்கள், 5 ஆயிரத்துக்கு மேல் உள்ள ஓட்டல் அறை கட்டணம் ஆகியவை உயரும் என்று தெரிகிறது. \'இனி 3 அடுக்கு முறை\'ஜிஎஸ்டி வரி உயரப் போகிறது என்பதை மறுக்காத கவுன்சில் தரப்பு அதிகாரிகள், அடுத்த வாரம் நடக்கும் கூட்டத்தில் இரு முக்கிய முடிவு எடுக்கப்படும். ஒரு பக்கம், வரி வருவாயை அதிகரிக்கும் வகையில் வரி முறை மாறும் என்றாலும், இன்னொரு பக்கம் ஐந்தடுக்கு முறைக்கு பதில் மூன்றே அடுக்கு வரி முறைதான் இருக்கும் என்று தெரிவித்தனர்.

மூலக்கதை