மக்கள் அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவம்: அரசுக்கு ஜனாதிபதி அறிவுரை

தினகரன்  தினகரன்
மக்கள் அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவம்: அரசுக்கு ஜனாதிபதி அறிவுரை

ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் 2வது பட்டமளிப்பு விழா, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. மருத்துப் படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின் அவர் பேசியதாவது: நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தரமான கல்வி, மருத்துவ வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய மேலும் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக, கிராமப் புறங்களில் வசிப்பவர்களுக்கு இவை கிடைக்க வழி வகுக்க வேண்டும்.டெல்லி எய்ம்ஸ்க்கு அடுத்தபடியாக, மருத்துவ மாணவர்கள் விரும்பி தேர்வு செய்யும் மருத்துவக் கல்லூரியாக ஜோத்பூர் எய்ம்ஸ் விளங்குகிறது. பழங்குடியின மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் இன்றியமையாத பணியாற்றி உள்ளது. இங்கு 24 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை