நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: ராகுல் குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: ராகுல் குற்றச்சாட்டு

சுல்தான் பதேரி: கேரள மாநிலம், சுல்தான் பதேரியில் நடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டத்தில் ராகுல் நேற்று பேசியதாவது: நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து விட்டது. பெண்கள் பலாத்காரம், மானபங்கம் செய்திகளை ஒவ்வொரு நாளும் படிக்கிறோம். சிறுபான்மையினர், தலித்துகள் மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. இதற்கு சட்டம் ஒழுங்கு இன்மையும், அரசு கட்டமைப்புகள் சீர்குலைந்ததும்தான் காரணம். நாட்டை ஆளும் நபருக்கு, வன்முறை, அராஜகத்தில்தான் நம்பிக்கை உள்ளது.உலக நாடுகள், இந்தியாவை ஒரு வழிகாட்டியாக பார்த்தன. ஆனால் தற்போது, பெண்களை மதிக்கத் தெரியாத நாடாக பார்க்கின்றன. பொருளாதாரம் நாட்டின் மிகப் பெரிய பலமாக இருந்து வந்தது. தற்போது, அதுவே மிகப்பெரிய பலவீனமாகி விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை