கோவை பெண்ணை மணக்கிறார் விஜயகாந்த் மகன்

தினகரன்  தினகரன்
கோவை பெண்ணை மணக்கிறார் விஜயகாந்த் மகன்

சென்னை:தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா தம்பதிகளுக்கு விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். விஜயபிரபாகரனுக்கும், கோவை பெரியநாயகன் பாளையத்தை சேர்ந்த இளங்கோ என்பவரின் மகள்  கீர்த்தனாவுக்கும் திருமணம் செய்ய இரு குடும்பத்தினரும் பேசி வந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் விஜயபிரபாகரன் திருமண ஒப்பந்தம் கோவையில் நடந்தது.அடுத்த ஆண்டு  மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடக்கிறது. அதன்பின்னர்  திருமண தேதி அறிவிக்கப்படும்.

மூலக்கதை