திருவண்ணாமலையில் மின் ஊழியர்களுக்கு 14ம் தேதி பணி

தினகரன்  தினகரன்
திருவண்ணாமலையில் மின் ஊழியர்களுக்கு 14ம் தேதி பணி

சென்னை: திருவண்ணாமலை மின்ஊழியர்களுக்கு வரும் 14ம் தேதியை பணி நாளாக, வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:கார்த்திகை தீபத்திருவிழா ஒவ்ெவாரு ஆண்டும் திருவண்ணாமலையில் சிறப்பாக கொண்டாடப்படும். இவ்வாண்டு வரும் 10ம் தேதி இவ்விழா நடக்கிறது. இதையொட்டி இங்கு அன்றை  தினம் விடுமுறை விடப்பட்டுள்ளது. இது சம்மந்தப்பட்ட மாவட்டத்தை சேர்ந்த மின்வாரிய ஊழியர்களுக்கும் பொருத்தும். எனவே மின்வாரிய ஊழியர்கள் இதற்கான பணியை 14ம் தேதியாக செய்யவேண்டும் எனக்கூறி அதிகாரிகளுக்கு  சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மூலக்கதை