இளம் எஸ்பி முதல் சைபராபாத் போலீஸ் கமிஷனர் வரை வெறும் கைது செய்வதைத் தவிர வேறு ஏதாவது...? 2008 டிசம்பரை நினைவுபடுத்தியது இன்றைய என்கவுன்டர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இளம் எஸ்பி முதல் சைபராபாத் போலீஸ் கமிஷனர் வரை வெறும் கைது செய்வதைத் தவிர வேறு ஏதாவது...? 2008 டிசம்பரை நினைவுபடுத்தியது இன்றைய என்கவுன்டர்

ஐதராபாத்: இளம் எஸ்பியாக இருந்த காலத்தில் ஆசிட் வீச்சு விவகாரத்தில் 3 பேரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது இன்றைய சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் தலைமையிலான போலீஸ் படைதான். அவரது தலைமையிலான குழுதான், இன்று பெண் டாக்டர் பலாத்கார கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது.

இது, 2008 சம்பவத்தை நினைவுபடுத்துவது போல் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ெதலங்கானா மாநிலத்தின் ககாதியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் இரண்டு பெண் பொறியியல் மாணவிகள், கடந்த 2008 டிசம்பரில் ஆசிட் வீசி தாக்கப்பட்ட சம்பவத்தில், பொதுமக்கள் பெரும் கோபத்தை வெளிப்படுத்தினர்.

வாரங்கலில் ஆசிட் வீசிய மூன்று இளைஞர்கள் 48 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டனர். பல்வேறு தரப்புகளில் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக, குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் போலீசார் ‘என்கவுன்டரில்’ சுட்டுக் கொன்றனர்.



கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பின்னர், ஆதாரங்களை சேகரிப்பதன் ஒரு பகுதியாக 3 குற்றவாளிகளும் குற்றம் நடந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். ‘அந்த 3 பேரும் ஆயுதம் மற்றும் ஆசிட்டால் போலீசாரை தாக்க முயன்றனர்.

அதனால், காவல்துறையினர் தற்காப்புக்காக மூவரையும் சுட்டுக் கொன்றனர்’ என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது வாரங்கல் மாவட்ட இளம் போலீஸ் சூப்பிரண்ட்டாக இருந்த விஸ்வநாத் சஜ்ஜனாரை, பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து பாராட்டினர்.

அவரை தங்களது தோள்களில் ஏற்றி கொண்டாடினர். ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமாக இருந்த போது சம்பவம் நடந்திருந்தாலும்கூட, ஆந்திர காவல்துறையின் வரலாற்றில் அந்த இளம் எஸ்பி சஜ்ஜனார், அவரது சகாக்களால் ‘அமைதியான ஆப்ரேட்டர்’ என்று அழைக்கப்பட்டார்.



கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது மூத்த ஐ. பி. எஸ் அதிகாரியும், சைபராபாத்தின் போலீஸ் கமிஷனருமான சஜ்ஜனார், மீண்டும் தற்போது ஒரு புதிய சூழலை எதிர்கொண்டுள்ளார். அதுதான், ஐதராபாத் கால்நடை பெண் மருத்துவர் டிசா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)வை, 4 பேர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து, எரித்துக் கொன்றது.

பொதுமக்களின் பெரும் கோபத்தால், தெலங்கானாவே போராட்டக் களமாக மாறியது. இவ்விவகாரம் நாடாளுமன்றத்திலும் புயலை கிளப்பியது.

குற்றம்சாட்டப்பட்ட அந்த 4 பேரையும் சுட்டுத் தள்ள வேண்டும். பொது இடத்தில் வைத்து தாக்கி ெகால்ல வேண்டும் என்றெல்லாம் பெண் எம்பிக்கள் பேசி, தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.

ேமலும், ‘தனது சகோதரியை அழைத்ததற்கு பதிலாக, ‘100’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை டயல் செய்திருக்க வேண்டும்’ என்று உள்துறை அமைச்சர் முகமது மஹ்மூத் அலி அளித்த அறிக்கை, மக்களிடையே பெரும் கோபத்தை தூண்டியது. போலீசாரும், இந்த வழக்கைக் கையாண்ட விதத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகினர்.



‘தெலங்கானா போலீசார் மீண்டும் தங்களை ‘ஹீரோ’வாக வெளிப்படுத்த வேண்டும். வெறும் கைது செய்வதைத் தவிர வேறொன்றையும் செய்ய வேண்டும்’ என்ற அர்த்தங்களில் கடந்த ஒருவாரமாக ட்விட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு பிரசாரங்கள் நடந்தன.

இவ்விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால், கடந்த ஒருவாரமாக போலீஸ் உயரதிகாரிகள் ‘வேறு ஏதாவது’ என்ற அடிப்படையில் தீவிர ஆலோசனை நடத்தினர். முன்னதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், குற்றவாளிகளுக்கு விரைவான தண்டனை பெற்றுத் தருவதற்காக சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கும் உத்தரவிட்டார்.

ஆனால், போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார், டிச. 13, 2008 இரவு வாரங்கல் ‘என்கவுன்டர்’ சம்பவத்தில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட சில மணி நேரத்தில் ‘அந்த’ சம்பவத்தை நடத்தி முடித்தனர்.



ஆனால், டிசா விஷயத்தில், அப்படி உடனடியாக நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். காரணம், குற்றவாளிகளிடம் இருந்து  வாக்குமூலம், தடயவியல் அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை போன்ற ஆதாரங்களை பெற்று, சம்பவத்தை உறுதிசெய்த பின்னரே, குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் இன்று அதிகாலை என்கவுன்டரில் போலீசார் சுட்டுக் கொன்றனர்.

இன்றைய சம்பவத்திலும், வழக்கம்போல் போலீசாரை குற்றவாளிகள் தாக்க முயன்றதால், போலீசார் தங்களை தற்காத்துக் கொள்ள, என்கவுன்டர் நடத்தியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், என்கவுன்டர் திட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என்று சிலர் கருதினாலும், சில அதிகாரிகளிடமிருந்து பரிந்துரைகள் வந்த பின்னரே, இன்றைய முடிவு எடுக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


.

மூலக்கதை