படகு கவிழ்ந்து 58 அகதிகள் பலி

தினமலர்  தினமலர்
படகு கவிழ்ந்து 58 அகதிகள் பலி

நவ்காட்: காம்பியா நாட்டை சேர்ந்த அகதிகள் சென்ற படகு அட்லான்டிக் கடலில் மூழ்கியதில் 58 பேர் பலியாகினர். காம்பியாவில் இருந்து தஞ்சம் பெற ஸ்பெயின் அருகே ஒரு தீவுக்கு சென்ற வழியில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
ஆண்கள். பெண்கள், குழந்தைகள் என 150 பேர் காம்பியாவில் இருந்து படகில் பயணித்தனர். 6 நாட்களாக தொடர்ந்து பயணித்ததால் பசியால் ஏதும் உணவு கிடைக்காதா என்ற எண்ணத்தில் மேற்கு ஆப்ரிக்க நாட்டின் மவுரிடேனியா தீவு நோக்கி சென்றனர். இங்கு செல்லும் போது படகு மூழ்கியது. பலரும் உயிருக்கு போராடிய நிலையில் மவுரிடேனியா மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். இதில் 80க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். 58 பேர் பலியாகினர்.
உள்துறை அமைச்சர் முகம்மது சலீம் நிருபர்களிடம் கூறுகையில்; மீட்கப்பட்டோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காணாமல் போன சிலரை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த படகில் 20 முதல் 30 வயதுக்குட்பட்டோரே அதிகம் இருந்ததாக அவர் தெரிவித்தார்.
வேலையின்மை, வறுமை, காரணமாக இந்த அகதிகள் மாற்று இடம் நோக்கி சென்றதாக ஐ.நா., அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மூலக்கதை