ஆவடி மாநகராட்சி வார்டு தேர்தலில் போட்டியிட 142 பேரிடம் நேர்காணல்: சா.மு.நாசர் பங்கேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆவடி மாநகராட்சி வார்டு தேர்தலில் போட்டியிட 142 பேரிடம் நேர்காணல்: சா.மு.நாசர் பங்கேற்பு

ஆவடி: ஆவடி மாநகராட்சியில் உள்ள கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில், போட்டியிட விருப்ப மனு அளித்த கட்சியினரிடம்  ஆவடி மாநகர அலுவலகத்தில் நேற்று காலை நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் ஆவடி  சா. மு. நாசர் பங்கேற்று 48 வார்டுகளில்  போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் வார்டு வாரியாக தனித்தனியாக  அழைத்து நேர்காணல் நடத்தினார்.

இதில் 48 வார்டுகளில் விருப்ப மனு கொடுத்த 142 பேரிடம் கட்சியில் பொறுப்பு,  ஆற்றிய பணிகள் மற்றும் போராட்டத்தில் பங்கேற்றது, சிறை சென்றது தொடர்பான பல்வேறு கேள்விகள்  கேட்கப்பட்டன.

ஆவடி மாநகராட்சி, 23வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்த மாவட்ட செயலாளர்  சா. மு. நாசரிடம், மாவட்ட அவைத்தலைவர் திராவிடபக்தன் நேர்காணல் நடத்தினார்.

இதில் ஆ. கிருஷ்ணசாமி எம்எல்ஏ,  மாவட்ட அவைத்தலைவர் திராவிட பக்தன், மாவட்ட துணைச்செயலாளர் நடுக்குத்தகை ரமேஷ், ஆவடி மாநகர  செயலாளர் ஜி. ராஜேந்திரன், அவைத்தலைவர் ருக்கு, துணைச்செயலாளர் பேபி சேகர், மாநகர நிர்வாகிகள் சண்பிரகாஷ்,  கலை சேகர், நளினி கோபி, வக்கீல் சேகர், பொன்விஜயன், பதாகை சிங்காரம் மற்றும் வழக்கறிஞர்கள் புரட்சிதாசன்,  ரவிக்குமார், வட்ட செயலாளர்கள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

.

மூலக்கதை