உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் மார்ச்சில் திறப்பு: உலக லெவன் - ஆசிய லெவன் போட்டி...ஐசிசி அனுமதிக்கு பிசிசிஐ காத்திருப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் மார்ச்சில் திறப்பு: உலக லெவன்  ஆசிய லெவன் போட்டி...ஐசிசி அனுமதிக்கு பிசிசிஐ காத்திருப்பு

அகமதாபாத்: உலகில் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமாக ஆஸ்திரேலியாவின்  மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் உள்ளது. இம்மைதானத்தில் 90  ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்க கூடிய வசதி உள்ளது.

இதைவிட பெரிய மற்றும் விசாலமான மைதானம், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்  பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய மைதானத்தில் 1. 10 லட்சம் பேர் அமர்ந்து பார்க்க முடியும்.

சுமார் 63 ஏக்கர்  பரப்பளவில் 700 கோடி  ரூபாய் செலவில் அகமதாபாத்தின் மொட்டேரா பகுதியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த மைதானத்தின் பணிகள் தற்போது முடியும் தருவாயில்  உள்ளன.

அடுத்தாண்டு திறப்பு விழா காணவுள்ளதால், இதன் கட்டுமான பணி முடிவுக்கு வரவுள்ளது.

இந்நிலையில், இந்தப் பெரிய மைதானத்தில்  அடுத்தாண்டு மார்ச் மாதம் வாக்கில் நடக்கவிருக்கும் உலக லெவன் மற்றும் ஆசிய லெவன் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை  முதல் போட்டியாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக பிசிசிஐ சார்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஐசிசி ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் உலகிலேயே மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உலக லெவன்  மற்றும் ஆசிய லெவன் அணிகளுக்கு இடையேயான போட்டி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.

மூலக்கதை