மூன்று சதங்களை விளாசிய வார்னர் காந்தியின் பொன்மொழி சரிதான்...ட்விட்டில் மனைவி பாராட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மூன்று சதங்களை விளாசிய வார்னர் காந்தியின் பொன்மொழி சரிதான்...ட்விட்டில் மனைவி பாராட்டு

அடிலெய்டு: பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், ஆஸ்திரேலியாவின் துவக்க வீரர் டேவிட் வார்னர் மூன்று சதங்களை (335  ரன்கள்) அடித்து கைகொடுக்க, அந்த அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 589 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து களமிறங்கிய  பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 302 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஃபாளோ ஆன் பெற்றது.

இரண்டாவது இன்னிங்சிலும் 239 ரன்களுக்கு ஆல்  அவுட்டாகி இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

அதிரடி சூறாவளியான வார்னரின் எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கையே கேள்விக்குறி தான் பலரும் விமர்சித்த நிலையில், முச்சதம் அடித்து பல  சாதனைகளை தனக்கு மிகவும் ராசியான அடிலெய்ட் மைதானத்தில் தகர்த்து அசத்தினார்.

இதற்கிடையில் டெஸ்ட் அரங்கில் இதுவரை யாரும்  நெருங்கக்கூட முடியாத 400 ரன்கள் என்ற சாதனையை வார்னர் தகர்ப்பார் என்றும், அதற்காக அவரை பாராட்ட தயாரானதாகவும் முன்னாள் வெஸ்ட்  இண்டீஸ் வீரர் லாரா தெரிவித்தார்.

இந்நிலையில் மகாத்மா காந்தியின் வார்த்தைகளை குறிப்பிட்டு வார்னரின் மனைவி கேன்டிஸ் அவரை புகழ்ந்துள்ளார்.

இதுதொடர்பாக கேன்டிஸ்  வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘பலம் என்பது வெறும் உடற்தகுதியால் மட்டும் வருவதல்ல. அது வெல்லமுடியாத மனஉறுதியால் வருவது.   உங்கள் மீது மற்றவர்கள் எவ்வளவு நம்பிக்கை வைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல.

உங்கள் மீது நீங்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளீர்கள்  என்பதே முக்கியம்’ என மகாத்மா காந்தி கூறியதாக அதில் குறிப்பிட்டு தன் கணவரை பாராட்டியுள்ளார்.

.

மூலக்கதை