ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் ஒரே ஆயுதம் இந்திய அணிதான்...இங்கிலாந்து மாஜி கேப்டன் ட்விட்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் ஒரே ஆயுதம் இந்திய அணிதான்...இங்கிலாந்து மாஜி கேப்டன் ட்விட்

லண்டன்: ஆஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் அணி டி20 மற்றும் டெஸ்ட் என இரண்டு தொடர்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய வேகப்பந்து  வீச்சாளர்களுக்கு பதில் தேடாமல், பேட்ஸ்மேன்கள் மீது பாகிஸ்தான் அணி குறைகூறி வருகிறது.

இதற்கிடையில் இங்கிலாந்து அணியின் முன்னாள்  கேப்டன் டேவிட் வான் இந்திய அணியை பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து வான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘இந்த ஆஸ்திரேலிய அணியை அவர்கள் இடத்தில் வீழ்த்துவது கடினம். தற்போதுள்ள  நிலையில் அதைசெய்யும் சரியான ஆயுதம் இந்திய அணியிடம் தான் உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

டேவிட் வார்னர் மற்றும் லபுஷேன் போன்ற  டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் போது, பின்வரிசை வீரர்களுக்கு அதிக நெருக்கடி இருக்காது என்பது  குறிப்பிடத்தக்கது.



.

மூலக்கதை