அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்சிக்கு 6வது முறையாக ‘பாலன் டி ஓர்’ விருது: உலகின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்சிக்கு 6வது முறையாக ‘பாலன் டி ஓர்’ விருது: உலகின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு

பாரீஸ்: கால்பந்து உலகில் பெருமைக்கும் மரியாதைக்கும் உரியதாகக் கருதப்படும் விருது, ‘பாலன் டி ஓர்’ விருது ஒரு தலைசிறந்த  பத்திகையாளர்கள் வாக்களித்து, விருதுக்குரிய வீரரைத் தேர்வுசெய்வார்கள். 2007ம் ஆண்டு முதல் அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸியும்,  போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுமே மாறி மாறி, ‘பாலன் டி ஓர்’ விருதைப் பெற்றுவந்தனர்.

‘இவர்களை விட்டால் வேற ஆளே  இல்லையா?’ என்று, அதிருப்தி குரல்கள் எழுந்தவண்ணம் இருந்தன. மெஸ்ஸி, ரொனால்டோவின் பத்தாண்டு ஆதிக்கத்திற்கு ‘டாட்’ வைத்து, 2018ம்  ஆண்டுக்கான ‘பாலன் டி ஓர்’ விருதை குரோஷியாவின் லூக்கா மோட்ரிச் வென்றார்.



இந்நிலையில், பாரீசில் நடந்த பிரான்ஸ் கால்பந்து பத்திரிகை ஏற்பாடு செய்த உலகின் சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.   அதில், பார்சிலோனாஸ் லியோனல் மெஸ்ஸி (32) ஆறாவது முறையாக விருதை வென்றார். இவர் இதற்கு முன்பு 2009, 2010, 2011, 2012 மற்றும்  2015ம் ஆண்டுகளில் ‘பாலன் டி ஓர்’ விருதைப் பெற்றுள்ளார்.   இதுகுறித்து, லியோனல் மெஸ்ஸி கூறுகையில், ‘‘நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதை நான் உணர்கிறேன்.

ஒரு நாள் நான் ஓய்வு பெற்றாலும் கூட,  இதனை மறக்க முடியாது. ஆனால் எனக்கு இன்னும் நிறைய நல்ல ஆண்டுகள் உள்ளன.

நேரம் மிக விரைவாக செல்கிறது; எனவே நான்  கால்பந்தையும் எனது குடும்பத்தையும் ரசிக்க விரும்புகிறேன்” என்றார்.

.

மூலக்கதை