இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலிராஜ் வாழ்க்கை படத்தில் டாப்ஸி

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலிராஜ் வாழ்க்கை படத்தில் டாப்ஸி

மும்பை: மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலிராஜ் வாழ்க்கை கதை படமாகிறது. மிதாலியாக டாப்ஸி நடிக்கிறார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலிராஜ். ேஜாத்புரில் வசித்து வந்தாலும் இவர் ஒரு தமிழச்சி.

சர்வதேச, இந்திய அணிகளுக்கு இடையே  நடந்த கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று அதிக ரன் குவித்து சாதனை நிகழ்த்தி உள்ளார். அவரது வாழ்க்கை, ‘சபாஷ் மிது’ பெயரில்  திரைப்படமாகிறது.

மிதாலி வேடத்தில் நடிகை டாப்ஸி நடிக்க உள்ளார்.

 இவர் தமிழில் ஆடுகளம், வந்தான் வென்றான் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர்.   தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். இதுபற்றி டாப்ஸி கூறும்போது, ‘மிதாலி ராஜ் வாழ்க்கை  கதையில் நடிப்பது எனக்கு கிடைத்த  பெருமை.

இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு மிதாலியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இப்படத்தில்  நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி  காத்துக்கொண்டிருக்கிறேன்’ என்றார்.

வித்யாபாலன் நடித்த கஹானி, கங்கனா ரனவத் நடித்த குயின்,  பிரியங்கா சோப்ரா நடித்த மேரி கோம், தீபிகா படுகோன் நடித்த பத்மாவத் படங்களை   தயாரித்த வயாகாம்18 ஸ்டூடியோ இப்படத்தை தயாரிக்கிறது.

.

மூலக்கதை