நேதாஜி ரகசிய ஆவணங்கள்: மத்திய அரசு புது முடிவு

தினமலர்  தினமலர்
நேதாஜி ரகசிய ஆவணங்கள்: மத்திய அரசு புது முடிவு

புதுடில்லி: மத்திய இணை அமைச்சர் பிரகலாத்சிங் படேல் லோக்சபாவில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துபூர்வமாக அளித்த பதில், இந்திய தேசிய ராணுவத்தை நிறுவியரும், சுதந்திர போராட்ட வீரரருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பாக மத்திய அரசிடம் 304 ரகசிய ஆவணங்கள் உள்ளன. இவற்றில் 58 பிரதமர் அலுவலகத்திலும், 37 மத்திய உள்துறை அமைச்சகத்திடமும், 200 வெளியுறவு விவகார அமைச்சகத்திடமும், 9 மத்திய அமைச்சரவை செயலரிடமும் பராமரிக்கப்பட்டு வந்தன.

இந்த ரகசிய ஆவணங்களை இந்திய தேசிய ஆவணகாப்பகத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 303 ரகசிய ஆவணங்கள் http:// www.netajipapers.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவற்றினை பொதுமக்கள் பார்வையிடலாம் என்றார்.


மூலக்கதை