பார்லி குழு விசாரணை டிரம்ப் ஆஜராக மாட்டார்

தினமலர்  தினமலர்
பார்லி குழு விசாரணை டிரம்ப் ஆஜராக மாட்டார்

வாஷிங்டன்: 'அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி செய்ய முயன்றதாக தன் மீது கூறப்பட்ட புகாரின் மீதான பார்லி குழுவின் விசாரணையில் டொனால்டு டிரம்ப் ஆஜராக மாட்டார்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் அடுத்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட டிரம்ப் முனைந்துள்ளார். அதேபோல் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் முயற்சித்து வருகிறார்.இந்த நிலையில் ஜோ பிடன் மீது ஊழல் புகார்களை கூறுவதற்கு மத்திய ஆசிய நாடான உக்ரைனின் அதிபரின் உதவியை டிரம்ப் நாடியதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக ஜனநாயகக் கட்சியினர் கண்டன தீர்மானம் கொண்டு வந்தனர். இதை பார்லி குழு விசாரித்து வருகிறது. விரைவில் விசாரணை நடக்க உள்ள நிலையில் பார்லி குழுவுக்கு டிரம்பின் வழக்கறிஞர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 'அதிபர் டிரம்ப் வெளிநாடு செல்லும் நிலையில் இந்த விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது உள்நோக்கம் கொண்டதாக பார்க்கப்படுகிறது. அதனால் விசாரணையில் டிரம்போ அவருடைய சார்பில் வழக்கறிஞர்களோ பங்கேற்க மாட்டார்கள்' என கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை