புல்லட் ரயில் திட்டம் நிறைவேறுமா?: உத்தவ் தாக்கரே

தினமலர்  தினமலர்
புல்லட் ரயில் திட்டம் நிறைவேறுமா?: உத்தவ் தாக்கரே

மும்பை: ''ஆமதாபாத் - மும்பை புல்லட் ரயில் திட்டம் உட்பட, மஹாராஷ்டிராவில் தற்போது செயல்படுத்தப் படும் அனைத்து திட்டங்களும் மறு ஆய்வு செய்யப்படும்,'' என, அம்மாநில முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்து உள்ளார்.

மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, நேற்று அளித்த பேட்டி:சிவசேனா தலைமையில் அமைந்துள்ள கூட்டணி அரசு, சாமானிய மக்களுக்கானது; வசதி படைத்தவர்களுக்கானது அல்ல. மும்பை - ஆமதாபாத் இடையே அமையவுள்ள புல்லட் ரயில் திட்டத்துக்கு தடை விதிக்கப்படுமா என கேட்கிறீர்கள். இந்த விஷயத்தில், ஆரோ மெட்ரோ ரயில் வாகன நிறுத்தத்துக்கு தடை விதிக்கப்பட்டது போன்ற முடிவை எடுக்க முடியாது.

ஆனால், புல்லட் ரயில் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து, மறு ஆய்வு செய்யப்படும். அந்த திட்டம் மட்டுமல்ல; மஹாராஷ்டிராவில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களும் மறு ஆய்வு செய்யப்படும். மாநில அரசு, தற்போது, 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது.

ஆனாலும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதில் உறுதியாக உள்ளோம். மாநிலத்தின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை