லண்டன் பாலம் தாக்குதல் பாக்., பயங்கரவாதி கைது

தினமலர்  தினமலர்
லண்டன் பாலம் தாக்குதல் பாக்., பயங்கரவாதி கைது

லண்டன்:ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள லண்டன் பாலத்தில், சாலையில் சென்றவர்களை, இரு தினங்களுக்கு முன், ஒருவர் கத்தியால் தாக்கினார். இதில், இருவர் பலியாகினர். பலர், காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய, பாக்., பயங்கரவாதி உஸ்மான் கான் என்பவரை, போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில், லண்டன் நகர் முழுவதும், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, உஸ்மான் கானின் கூட்டாளி, நஸம் ஹுசைன் என்ற பயங்கரவாதியை, போலீசார் கைது செய்தனர். இவர், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள, உஸ்மான் கானின் ஊரை சேர்ந்தவர் என்பது, விசாரணையில் தெரிய வந்தது.


மூலக்கதை