மைசூரு மாணவர் கொலை போலீசில் அமெரிக்கர் சரண்

தினகரன்  தினகரன்
மைசூரு மாணவர் கொலை போலீசில் அமெரிக்கர் சரண்

வாஷிங்டன்:  அமெரிக்காவின் சான்பெர்னார்டினோ பல்கலையில் படித்தவர் மைசூரை சேர்ந்த அபிஷேக் சுதேஷ்(25). கடந்த 28ம் தேதி ஓட்டலுக்கு வெளியே நின்றிருந்த அபிஷேக்கை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளியை தேடிவந்தனர். இந்நிலையில் கடந்த 30ம் தேதி எரிக் டேர்னர் (42) என்ற அமெரிக்கர் சான் பெர்னார்டினோ போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது ெசய்து அபிஷேக்கை கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை