அமெரிக்காவில் விபத்தில் இந்திய மாணவி, மாணவர் பலி

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் விபத்தில் இந்திய மாணவி, மாணவர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவில் கார் மீது லாரி மோதிய விபத்தில் இந்தியாவை சேர்ந்த மாணவி, மாணவர் ஒருவர் பலியானார். இந்தியாவை சேர்ந்தவர் ஜூடி(23), வைபவ் (26). இருவரும் அமெரிக்காவின் டென்னிசி பல்கலைக்கழகத்தில் வேளாண் கல்லூரியில் படித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 28ம் தேதி நடந்த நன்றி தெரிவிக்கும் விழாவில் ஜூடி, வைபவ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். பின்னர் இருவரும் காரில் திரும்பி வந்துள்ளனர். தெற்கு நாஸ்வில்லே பகுதியில் கார் வந்தபோதுே எதிரே வேகமாக வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்பு சுவரில் இடித்து மரத்தில் ேமாதி நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த ஜூடி மற்றும் வைபவ் ஆகியோர் உயிரிழந்தனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றார். சடலங்களை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். லாரி ஓட்டுனர் டேவிட் டோரஸ்(26) போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பினார்கள். இதனை தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

மூலக்கதை