பிரியம் கார்க் கேப்டன் * 19 வயது ‘உலக’ அணி அறிவிப்பு | டிசம்பர் 02, 2019

தினமலர்  தினமலர்
பிரியம் கார்க் கேப்டன் * 19 வயது ‘உலக’ அணி அறிவிப்பு | டிசம்பர் 02, 2019

மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் (19 வயது) பங்கேற்கும் இந்திய அணிக்கு பிரியம் கார்க், கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்ரிக்காவில் வரும் 2020ல் ஜனவரி 17 முதல் பிப்ரவரி 9 வரை நடக்கவுள்ளது. 16 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கவுள்ளன.

இதில் நான்கு முறை சாம்பியன் (2000, 2008, 2012, 2018) ஆன இந்திய அணி ‘ஏ’ பிரிவில் முதன் முறையாக தகுதி பெற்ற ஜப்பான், நியூசிலாந்து, இலங்கையுடன் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் ‘டாப்–2’ இடம் பிடிக்கும் அணிகள். சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறும்.

இதில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. உ.பி., பேட்ஸ்மேன் , 19 வயது பிரியம் கார்க், கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவர் முதல் தர போட்டியில் இரட்டை சதம், ‘லிஸ்ட் ஏ’ போட்டியில் சதம் அடித்துள்ளார். 2018–19 ரஞ்சி டிராபி சீசனில் 814 ரன்கள் குவித்தார். ‘லிஸ்ட் ஏ’ போட்டியில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஷ்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.

உலக கோப்பை தொடருக்கு முன் தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி, நியூசிலாந்து, ஜிம்பாப்வே இடம் பெற்ற நான்கு நாடுகள் தொடரிலும் பங்கேற்கிறது. இதற்கான அணியும் அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டிலும் தமிழகத்தில் இருந்து ஒரு வீரர் கூட தேர்வாகவில்லை.

‘உலக’ அணி

பிரியம் கார்க் (கேப்டன்), யாஷஸ்வி, திலக் வர்மா, திவ்யான்ஷ், துருவ் சந்த் (துணைக் கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷாஸ்வத், திவ்யன்ஷ் ஜோஷி, ஹெக்டே, ரவி பிஷோனி, ஆகாஷ் சிங், கார்த்திக் தியாகி, அதர்வா, குமார் குஷாக்ரா, சுஷாந்த், வித்யாதர்.

மூலக்கதை