வாகன விற்பனை மீண்டும் மந்தம்

தினகரன்  தினகரன்
வாகன விற்பனை மீண்டும் மந்தம்

புதுடெல்லி:  தொடர்ந்து பல மாதங்களாக விற்பனை சரிவால் ஆட்டோமொபைல் துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அக்டோபரில் பண்டிகை சீசன் தள்ளுபடி சலுகைளால் வாகன விற்பனை மிகச்சிறிதளவு உயர்ந்தது. ஆனால், சலுகைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால் நவம்பரில் மீண்டும் வாகன விற்பனை சரிந்துள்ளது. முந்தைய ஆண்டு நவம்பருடன் ஒப்பிடுகையில் ஒட்டு மொத்த அளவில் விற்பனை சுமார் 4 சதவீதம் சரிந்துள்ளதாக ஆட்டோமொபைல் துறையினர் கூறுகின்றனர். மாருதி சுசூகி, மகிந்திரா உள்ளிட்ட பிரபல நிறுவன கார்கள் விற்பனையும் சரிந்துள்ளது. தற்போது தள்ளுபடி சலுகை இல்லாதது மட்டுமின்றி, அடுத்த ஆண்டு பிஎஸ் 6 கார்கள் வர இருப்பதால், கார் வாங்கும் முடிவை வாடிக்கையாளர்கள் பலர் ஒத்திப்போட்டுள்ளனர் என ஆட்டோமொபைல் வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

மூலக்கதை