மதுபானம் பதுக்கி விற்ற 2 பேர் கைது

தினகரன்  தினகரன்
மதுபானம் பதுக்கி விற்ற 2 பேர் கைது

அண்ணாநகர்: அமைந்தகரை, புல்லா அவென்யூ சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே, அதிகாலை நேரங்களில் அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பதாக அமைந்தகரை போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் விவேகானந்தர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் கண்காணித்தபோது, டாஸ்மாக் கடை அருகே மதுபாட்டில்களை பதுக்கி, அதிக விலைக்கு விற்று வந்த 2 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்த விவேகானந்தன் (30), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (25) என்பதும், இவர்கள் இருவரும் டாஸ்மார்க் கடையில் பணிபுரிந்து அங்கேயே தங்கியிருப்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 29 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மூலக்கதை