ஜி.டி.பி., 5.1 சதவீதம் ‘கிரிசில்’ கணிப்பு

தினமலர்  தினமலர்
ஜி.டி.பி., 5.1 சதவீதம் ‘கிரிசில்’ கணிப்பு

புது­டில்லி:தர மதிப்­பீட்டு நிறு­வ­ன­மான, ‘கிரிசில்’, நடப்பு நிதி­யாண்­டுக்­கான, ஜி.டி.பி., எனும் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி கணிப்பை, 5.1 சத­வீ­த­மாக குறைத்து அறி­வித்­துள்­ளது.இந்­நி­று­வ­னத்­தின் முந்­தைய மதிப்­பீட்­டில், நடப்பு நிதி­யாண்­டுக்­கான வளர்ச்சி, 6.3 சத­வீ­த­மாக இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.
ரிசர்வ் வங்கி, இன்­றி­லி­ருந்து, 5ம் தேதி வரை, அதன் நிதிக் கொள்கை கூட்­டத்தை நடத்­து­கிறது. இக்­கூட்­டத்­தின் முடி­வில், வட்டி விகி­தம் குறித்த அதன் முடிவை அறி­விக்­கும். இந்­நி­லை­யில், கிரி­சி­லின் இந்த அறிக்கை முக்­கி­யத்­து­வம் பெற்­றுள்­ளது.
இது குறித்து, இந்­நி­று­வன அறி­விப்­பில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது:நடப்பு நிதி­யாண்­டின் இரண்­டா­வது அரை­யாண்­டில், வளர்ச்சி விகி­தம், முதல் அரை­யாண்­டி­லி­ருந்த, 4.75 சத­வீ­தத்தை விட அதி­க­ரித்து, 5.5 சத­வீ­த­மாக உய­ரும்.
தொழில் துறை உற்­பத்தி, வணிக ஏற்­று­மதி, வங்­கி­கள் கடன் வழங்­கு­வது அதி­க­ரிக்­கா­தது, சரக்கு போக்­கு­வ­ரத்து குறைவு, மின்­சார உற்­பத்தி சரிவு என பல­வற்­றில் சரிவு காணப்­ப­டு­வ­தால், வளர்ச்சி விகித கணிப்பு குறைக்­கப்­பட்­டுள்­ளது.இவ்­வாறு கிரி­சில் அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை