எல்.ஐ.சி., நிறுவனம் சிறப்பு சலுகை அறிவிப்பு

தினமலர்  தினமலர்
எல்.ஐ.சி., நிறுவனம் சிறப்பு சலுகை அறிவிப்பு

சென்னை:எல்.ஐ.சி., பாலிசி சந்­தாவை, இனி கட்­ட­ண­மில்­லா­மல், ‘கிரெ­டிட் கார்டு’ வாயி­லாக செலுத்­த­லாம் என, எல்.ஐ.சி., நிறு­வ­னம் அறி­வித்­துள்­ளது.
இது குறித்து, எல்.ஐ.சி., வெளி­யிட்ட செய்­திக்­கு­றிப்பு:‘டிஜிட்­டல்’ பரி­வர்த்­த­னையை ஊக்­கு­விக்­கும் வகை­யில், கிரெ­டிட் கார்டு வாயி­லாக செலுத்­தும் சந்­தா­விற்­கான கட்­ட­ணத்தை, எல்.ஐ.சி., நிறு­வ­னம் ரத்து செய்­துள்­ளது.
இந்த முறை, டிச., 1ம் தேதி முதல் நடை­மு­றைக்கு வந்­துள்­ளது. பாலிசி புதுப்­பித்­தல், சந்­தாவை முன்­கூட்­டியே செலுத்­து­தல், கடன் மற்­றும் கடன் வட்­டியை திரும்ப செலுத்­து­தல் போன்­ற­வற்றை, கிரெ­டிட் கார்டு, ‘ஆன்­லைன்’ வாயி­லாக, இனி கட்­ட­ண­மில்­லா­மல் செலுத்­த­லாம். அனைத்து எல்.ஐ.சி., வசூல் மையங்­க­ளி­லும், இந்த வசதி அமல்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது. ‘மைஎல்­ஐசி ஆப்’ வாயி­லா­க­வும், ஆன்­லைன் சேவையை பாலி­சி­தா­ரர்­கள் பெற்­றுக் கொள்­ள­லாம்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை