வாகன விற்பனை: தொடரும் சரிவு

தினமலர்  தினமலர்
வாகன விற்பனை: தொடரும் சரிவு

புது­டில்லி:சமீப கால­மாக வாகன விற்­பனை தொடர்ந்து சரிவை கண்டு வந்த நிலை­யில், கடந்த நவம்­பர் மாதத்­தி­லும் முக்­கி­ய­மான வாகன தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் பல­வற்­றின் விற்­பனை, சரிவை கண்­டுள்­ளது.
‘மாருதி சுசூகி’ நிறு­வ­னத்­தின், நவம்­பர் மாத விற்­பனை, 1.9 சத­வீ­தம் அள­வுக்கு குறைந்து, 1.5 லட்­சம் வாக­னங்­கள் விற்­பனை ஆகி­யுள்ளன.கடந்த ஆண்டு இதே மாதத்­தில், 1.54 லட்­சம் வாக­னங்­கள் விற்­பனை ஆகி­யி­ருந்­தன.உள்­நாட்டு விற்­பனை, 1.6 சத­வீ­தம் குறைந்து, 1.44 லட்­சம் வாக­னங்­கள் மட்­டுமே விற்­பனை ஆகி­உள்ளன.இதுவே, கடந்த ஆண்­டில் இதே மாதத்­தில், 1.46 லட்­சம் வாக­னங்­கள் விற்­பனை செய்­யப்­பட்­டி­ருந்­தன.
ஏற்­று­ம­தியை பொறுத்­த­வரை, 7.7 சத­வீ­தம் நவம்­பர் மாதத்­தில் சரிந்­துள்­ளது. நவம்­பர் மாதத்­தில் மொத்­தம், 6,944 கார்­கள் ஏற்­று­மதி ஆகி­யுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்­தில், 7,521 வாக­னங்­கள் ஏற்­று­மதி செய்­யப்­பட்­டு­ இருந்­தன.

மூலக்கதை