நவம்பரில் அதிகரித்தது தயாரிப்பு துறை உற்பத்தி வேலை இழப்பு 20 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு

தினமலர்  தினமலர்
நவம்பரில் அதிகரித்தது தயாரிப்பு துறை உற்பத்தி வேலை இழப்பு 20 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு

புது­டில்லி:கடந்த நவம்­பர் மாதத்­தில், நாட்­டின் தயா­ரிப்பு துறை­யின் உற்­பத்தி, ஓர­ளவு அதி­க­ரித்­துள்­ளது.
பிரிட்­ட­னைச் சேர்ந்த, ‘ஐ.எச்.எஸ்., மார்­கிட்’ எனும் நிறு­வ­னம், உலோ­கம், ரசா­ய­னம், காகி­தம், உணவு, ஜவுளி உள்­ளிட்ட எட்டு பிரி­வு­க­ளைச் சேர்ந்த, 400 நிறு­வ­னங்­களின், நவம்­பர் மாத தயா­ரிப்பு நில­வ­ரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது.
இந்த அறிக்­கை­யின் படி, இந்­தாண்டு நவம்­பர் மாதத்­தில், தயா­ரிப்பு துறை­யின் உற்­பத்தி வளர்ச்சி அடிப்­ப­டை­யி­லான, பி.எம்.ஐ., குறி­யீடு, 51.2 புள்­ளி­க­ளாக உள்­ளது.இது, அக்­டோ­ப­ரில், 50.6 புள்­ளி­க­ளாக இருந்­தது. அக்­டோ­பர் மாதத்­து­டன் ஒப்­பி­டும்­போது, நவம்­ப­ரில் ஓர­ளவு வளர்ச்சி பெற்­றுள்­ளது.
பி.எம்.ஐ., குறி­யீடு, 50 புள்­ளி­க­ளுக்கு அதி­க­மாக இருந்­தால், அது வளர்ச்­சியை குறிக்­கும். 50 புள்­ளி­க­ளுக்கு கீழே இருந்­தால், சரிவை குறிக்­கும்.
விற்­பனை குறைவுஇவ்­வ­றிக்­கை­யில் மேலும் கூறப்­பட்­டுஉள்­ள­தா­வது:தயா­ரிப்பு துறை­யின் உற்­பத்தி வளர்ச்சி, அக்­டோ­பரை விட, நவம்­ப­ரில் ஓர­ளவு அதி­க­ரித்­துள்­ளது. ‘ஆர்­டர்’கள் மற்­றும் உற்­பத்­திக்­கான வளர்ச்சி ஆகி­யவை சிறிது அதி­க­ரித்­தி­ருப்­ப­தால் இந்த உயர்வு ஏற்­பட்­டுள்­ளது.
சவா­லான பொரு­ளா­தார நிலை கார­ண­மாக விற்­பனை குறைவு ஏற்­பட்­டுள்­ளது. ஆனால், வேலை இழப்பை பொறுத்­த­வரை, கடந்த ஆண்டு மார்ச் மாதத்­திற்கு பிறகு இல்­லாத வகை­யில் அதி­க­ரித்­துள்­ளது.சில நிறு­வ­னங்­கள், தேவையை வலு­வாக்கி, புதிய ஆர்­டர்­களை எடுப்­ப­தில் வெற்றி பெற்­றுள்ளன.
ஆனால், மற்ற நிறு­வ­னங்­கள் பொரு­ளா­தார மந்­த­நிலை, சந்தை போட்டி, வாகன துறை­யில் ஏற்­பட்­டி­ருக்­கும் சிக்­கல்­கள் ஆகி­யவை கார­ண­மாக, போராட வேண்­டிய நிலையை சந்­தித்­தன.இருப்­பி­னும், அக்­டோ­ப­ரில் குறிப்­பி­டத்­தக்க வகை­யில், தயா­ரிப்பு துறை உற்­பத்தி வளர்ச்சி குறைந்­தி­ருந்த நிலை­யில், நவம்­ப­ரில் முன்­னேற்­றம் ஏற்­ப­டத் துவங்கி இருக்­கிறது.
தேவை குறைவு
ஆனா­லும், நடப்பு ஆண்டு துவக்க நிலை­யோடு ஒப்­பி­டும்­போது, தொழிற்­சாலை ஆர்­டர்­கள், உற்­பத்தி மற்­றும் ஏற்­று­மதி ஆகி­யவை இன்­னும் பின்­தங்­கியே உள்ளன.இதற்கு, தேவை குறைந்­ததே முக்­கி­ய­மான கார­ண­மாக அமைந்­தது.புதிய ஆர்­டர்­களும், தயா­ரிப்­பும் பர­வா­யில்­லாத நிலை­யில் இருந்­தா­லும், நிறு­வ­னங்­களில் வேலை இழப்பு, 20 மாதங்­களில் இல்­லாத அள­வுக்கு, நவம்­ப­ரில் அதி­க­ரித்­து உள்­ளது.
பல நிறு­வ­னங்­கள், இருக்­கும் ஊழி­யர்­களை பயன்­ப­டுத்தி வேலையை மேற்­கொண்­டுள்ளன. சில நிறு­வ­னங்­கள், பணி ஓய்வு பெற்­ற­வர்­களின் காலி இடங்­களை நிரப்­ப­வில்லை.அதே­போல், ஒப்­பந்த தொழி­லா­ளர்­களின் பணிக்­கா­லத்தை அவை நீட்­டிக்­க­வும் இல்லை.பண­வீக்­கத்­தைப் பொறுத்­த­வரை, உள்­ளீட்டு பொருட்­கள் மற்­றும் உற்­பத்­தி­யான பொருட்­கள் ஆகி­ய­வற்­றுக்­கான விலை சிறிது அதி­க­ரித்­துள்­ளது.

மூலக்கதை