பெண் டாக்டர் கொலை:குற்றவாளிகளை விசாரிக்க போலீஸ் மனு

தினமலர்  தினமலர்
பெண் டாக்டர் கொலை:குற்றவாளிகளை விசாரிக்க போலீஸ் மனு

ஐதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஐதராபாதில் சர்வதேச விமான நிலையத்திற்கு மிக அருகில் பெண் டாக்டரை நான்கு பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன் எரித்து கொலை செய்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பார்லி.யில் பெண் எம்.பி.க்களின் ஆவேச பேச்சால் பார்லிமென்டே கிடுகிடுத்தது.

நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு குற்றவாளிகளும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை 10 நாள் தங்களது காவலில் எடுத்து விசரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் சைபராபாத் போலீசார் மனு செய்துள்ளனர். இதன் மீதான விசாரணை விரைவில் நடக்கிறது.

முன்னதாக குற்றவாளிகள் சார்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ரெங்கா ரெட்டி, மெகபூபா நகர் ,ஷாத்நகர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் குற்றவாளிகள் சார்பில் ஆஜராக மாட்டோம் என முடிவு செய்துள்ளனர்.


மூலக்கதை