விக்ரம் லேண்டர்: நாசா கண்டறிந்தது

தினமலர்  தினமலர்
விக்ரம் லேண்டர்: நாசா கண்டறிந்தது

புதுடில்லி: நிலவின் தென் முனையை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை நிலவில் தரையிறக்கும் பணி செப்.,7 ம் தேதி நடந்தது. அப்போது தரையிறங்குவதற்கு 400 மீட்டர் தூரத்தில், பூமியுடனான கட்டுப்பாட்டை விக்ரம் லேண்டர் இழந்தது. தரையிறங்க நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் லேண்டர் இருப்பது, ஆர்பிட்டார் மூலம் கண்டறியப்பட்டது. இதனால் தொடர்ந்து விக்ரம் லேண்டரிடம் இருந்து தொடர்பை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்து வந்தனர். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவும், இஸ்ரோவுக்கு உதவியாக விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சித்தது.இந்நிலையில் விக்ரம் -2 லேண்டர் நிலவின் மேற்பரப்பில் இருப்பதுகண்டறிப்பட்டதாக நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.

மூலக்கதை